Skip to content
Home » தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு தடைபோடுவதை விளக்கி புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். அறந்தாங்கி கழக மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து,

மாவட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை ப.வீரப்பன், அறந்தாங்கி க.முத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சு.கண்ணன் அனைவரையும் வரவேற்றார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் துவக்கவுரையாற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் மாவட்டத் துணைத் தலைவர் வெ.ஆசைத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர் செ.இராசேந்திரன், நகரச் செயலாளர் ரெ.மு.தருமராசு, நகர அமைப்பாளர் ப.சேகர், நகரச் செயலாளர் பூ.சி.இளங்கோ, நகர இளைஞரணி அமைப்பாளர் தாமரைச்செல்வன், மகளிரணி வீர.வசந்தா, த.ஜெயலெட்சுமி, தா.மரகதம், த.ரெங்கமணி, அறந்தாங்கி நகரத் தலைவர் ஆ.வேலுச்சாமி, நகரச் செயலாளர் பால்ராஜ், கந்தர்வகோட்டை ஒன்றியத் தலைவர் சு.சித்திரவேல், மாவட்ட இளைஞரணித் தலைவர் கா.காரல்மார்க்ஸ், மாவட்ட மாணவரணித் தலைவர் குட்டி வீரமணி, புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் சாமி.இளங்கோ, பொன்னமராவதி ஒன்றியத் தலைவர் ஆ.மனோகரன், திருமயம் ஒன்றியத் தலைவர் தமிழரசன், வி.பார்த்தசாரதி, இரா.சம்பத், பேரறிவாளன், ஆ.சிவா, துரை.இந்திரஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வே.ஆசைத்தம்பி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!