தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

51
Spread the love

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வரும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு இயல்பைவிட 24 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மன்னார் பகுதியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறாரகள். அங்கு பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகப்படியாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY