தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 3 பேர் கர்நாடக வனப்பகுதிக்குள் மாடுகளைத் தேடிச் சென்றபோது, கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடச் சென்றதாக வனத்துறை பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் தமிழர்கள் என்பதால், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை”.. பெ.சண்முகம் கண்டனம்
