Skip to content
Home » தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலி வேட்புமனு தாக்கல்

  • by Senthil

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக  வழக்கறிஞர் முரசொலி போட்டியிடுகிறார். இன்று காலை அவர் கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.   முன்னதாக அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து  மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

வேட்புமனு தாக்கலின்போது தற்போதைய எம்.பி. பழனிமாணிக்கம், கிருஷ்ணசாலமி வாண்டையார்,  விசிக செயலாளர் ஜெய்சங்கர்,  இந்திய கம்யூ செயலாளர் பாரதி  மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!