Skip to content
Home » டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடை முன்பு போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடை முன்பு போராட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

கரூர் மாவட்ட கடவூர் தாலுக்கா பாறைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்(5057) கடை இருந்து வருகிறது, இந்தக் கடை பேருந்து நிறுத்தம் அருகே 50 மீட்டர் தொலைவிலும், தனியார் பள்ளி 100 மீட்டர் தொலைவில் இருந்து வருகிறது, ஐந்துக்கும் மேற்பட்ட குக்கிராம்களுக்கு இறங்கி செல்லும் பிரதான பேருந்து நிறுத்தமும் அருகில் தான் உள்ளது, அருகில் டாஸ்மார்க் கடை இருப்பதால் மது பிரியர்கள் மது குடித்து பேருந்து நிறுத்தத்தில் கிடந்து வருகின்றனர், அரைகுறை ஆடையில் சுற்றி வருவதால் பெண்கள் அப்பகுதியில் செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர்,இரவு நேரங்களில் கோழி

களவாடப்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகின்றனர்.

மது பிரியர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,பொதுவாக பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர், அதனைத் தொடர்ந்து கடை முன்பு ஒருமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடை மாற்றப்படும் என்று வாக்குறுதி மட்டும் அளித்த நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை, தொடர்ந்து மது பிரியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது எனவும் பாதிக்கப்பட்ட பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் ஒன்று கூடி மதுக்கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டது,தொடர்ந்து குளித்தலை சரக டிஎஸ்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் கடையை அகற்றுவதற்கு எவ்வித முகாந்தரமும் ஏற்படவில்லை,எனவே பொதுமக்கள் கடையை ஆற்றினால் மட்டும் போராட்டம் கைவிடப்படும் என்று கூறிவந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பாஜகவினரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பலமுறை கோரிக்கை வைத்தும் அகற்றாத டாஸ்மாக் கடை, டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!