Skip to content
Home » டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான  மானிய கோரிக்கை விவாதத்தில்   அமைச்சர் செந்தில் பாலாஜி  பல புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும்.

. மது அருந்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை மருந்துகளை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எரி சாராயம் போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்கத் தொகையை ரூ. 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடையில் 24,318 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.. தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை, மேற்பார்வையாளர்களுக்கு, ரூ.1,100ம்விற்பனையாளர்களுக்கு ரூபாய் 930ம்,உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 840ம்
மாதம்தோறும் கூடுதலாக உயர்த்தி 1.4.2023 முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 31.57 கோடி கூடுதல் செலவாகும்.

டாஸ்மாக் மதுபான சில்லறை 500 விற்பனை கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும்

பணியின்போது   மரணம் அடையும் டாஸ்மாக்  ஊழியர்கள் குடும்பத்துக்கு   வழங்கப்படும் குடும்ப நல உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதுவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

கிராமங்கள்,  நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பு  நடவடிக்கையாக இந்த நிதி ஆண்டில் 1,000 டாஸ்மாக் கடைகளில் ரூ.10.3 கோடி செலவில் பாதுகாப்பு பெட்டகங்கள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!