கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் பெய்த கனமழையின்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் ‘பல்லாட்டு பிரம்மதத்தன்’ என்ற புகழ்பெற்ற கோயில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. சுமார் 65 வயதான இந்த யானை திருவிழாக்களில் கலந்துகொண்டு மக்களிடம் மிகுந்த பிரியத்தைப் பெற்றிருந்தது. மின்னல் தாக்கி உயிரிழந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர். யானையின் மறைவுக்குப் பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
கேரளத்தில் மின்னல் தாக்கி கோயில் யானை பலி
