Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் பயங்கர வெடி விபத்து

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி அடுத்துள்ள மணப்படையூர் செல்லும் வழியில் செயல்பட்டு வந்த நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் நாட்டு வெடிகள் இருப்பு வைத்திருந்த கட்டிடங்கள் தரைமட்டம். காவல்துறையினர் தீவிர விசாரணை . கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவலஞ்சுழி அருகில் மனப்படையூர் செல்லும் வழியில் ஜேசுதாஸ் மற்றும் இவரது தாய் மேரி செல்வராணி ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடம் உள்ளது.

தற்போது கோவில்களில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்று வருவதால் திருவிழாக்களுக்கு தேவையான நாட்டு வெடிகள் அதிக அளவில் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில், நாட்டு வெடிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கட்டிடம் முற்றிலும் தரைமட்டமானது. நாட்டு வெடிகள் சுற்றி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் சீட்டுகள் அருகில் உள்ள மரத்தின் உச்சியில் தொங்கிக் கொண்டுள்ளது .

மேலும் இந்த விபத்தினால் அருகில் இருந்த தென்னை மரமும் எரிந்துள்ளது. இந்த வெடி விபத்தின் சத்தம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடங்களில் கேட்டுள்ளது. ‘ நல்ல வேளையாக அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நடைபெற்றதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது . சம்பவ இடத்தில் சுவாமிமலை காவல் நிலையத்தார் /கியூ பிரிவு காவல் துறையினர், மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!