Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் பள்ளிகள் அருகில் போதைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் மேற்கு காவல் நிலைய பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் அருகே உள்ள கடைகளில் மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்த தஞ்சை வடக்குவீதி அபிநயா ஸ்டோர், காமராஜ் மார்க்கெட் மற்றும் ரவி பட்டாணி கடை ஆகியவற்றிலிருந்து சுமார் ரூ.3,28,000 மதிப்பிலான 50 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் கீழவாசல் வாரித்தெருவைச் சேர்ந்த பஞ்சாபிகேசன், வடக்கு அலங்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொண்டி ராஜபாளையம் தெருவைச் சேர்ந்த மீனாட்சி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!