Skip to content
Home » ”தங்கலான்” படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

”தங்கலான்” படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தங்கலான்’. கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, அதற்கு காரணம் சியானின் மிரட்டலான தோற்றம்தாம். இது வரை பார்த்திராத வகையில் விக்ரமின் தோற்றம் உள்ளது.

photoஇந்த நிலையில் தற்போதைய அப்டேட்டாக படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது, அதன்படி படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் டீசர் அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!