Skip to content
Home » தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சை அருகேயுள்ள பெரிய புதுப்பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுராமன் இவர் தஞ்சைபர்|மா காலனியில் உள்ள அங்காளஈஸ்வரி கோவிலில் அறங்காவலர்கள் குழு தலைவராக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலதிட்டப்பணிகளை செய்துவரும் நிலையில் பருவநிலை மாறுபாட்டால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தஞ்சையில் மழை பெய்துவந்த நிலையில், பர்மா காலனி, மற்றும் பெரிய புதுப்பட்டிணத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பொங்கலை எப்படி கொண்டாடுவது என்ற நிலையில் வறுமையில் உள்ள 1000 நபர்களை தேர்ந்தெடுத்து ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ வெல்லம், மற்றும் ஒரு புடவை என ரூ.5 லட்சம் மதிப்பில் உள்ள பொங்கல் பொருட்களை ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்கினார் பொருட்களை ரகுநாதன், மற்றும் அவரது

மனைவி தரணிச் செல்வி வழங்கினார்கள், பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக கண்டறிந்து சி.பி.ஐ.எம்.எல்.மாநகர செயலாளர் எஸ்.எம்.ராஜேந்திரன் உதவி புரிந்தார். அவருடன் ஆனந்தன், ரவிச்சி (எ) ரவிச்சந்திரன் சூரிரவிச்சந்திரன், மோகன், வேணுகோபால், விஜயகுமார். பன்னீர்செல்வம் அருணா மோகன் ஆட்டோ சேகர் ஆகியோர் உறுதுணையாக இருந்து உதவிப் பொருட்களை வழங்கினார்கள். பயனாளி ஒருவர் கூறுகையில் பொங்கல் விழாவை எப்படி கொண்டாட போகிறோம் என்று விழிப்பு தங்கி இருந்த நிலையில் எங்களுக்கு உதவி கரம் நீட்டிய ரகுநாதன் தரணி செல்வி குடும்பத்தாருக்கு நாங்கள் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கின்றோம் எங்களது பகுதியில் எந்த உதவிகள் என்றாலும் மகிழ்வோடு பல நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய குடும்பத்தினர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!