Skip to content
Home » தஞ்சையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை….

தஞ்சையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உலக சாதனை….

  • by Senthil

தஞ்சையை சேர்ந்தவர் வினோத் குமார். இவரது மனைவி வைஷ்ணவி. இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7). வினோத் குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் கடந்த 8 மாதங்களாக ஐநாவால் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தேசிய கொடிகளை பார்த்து அவற்றின் மூலம், அவற்றின் நாடுகள், தலைநகரங்கள் மற்றும் அவற்றின் நாணயங்கள் போன்றவற்றை மிக குறைந்த நிமிடத்தில் சொல்வதற்கு பயிற்சி எடுத்துள்ளார்.

இதை பார்த்த வினோத் குமார் இதை வீடியோவாக பதிவு செய்து சோழன் உலக சாதனை புத்தக அமைப்பிற்கு அனுப்பினார். தொடர்ந்து இதை ஆய்வு செய்த சோழன் உலக சாதனைப் புத்தக அமைப்பினர் இந்த சாதனையை பதிவு செய்ய ஒப்புதல் அளித்தனர். தொடர்ந்து இந்த சாதனை நிகழ்வு சின்னக்கடைத் தெரு தஞ்சையில் அமைந்துள்ள சக்திவிநாயகர் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் நேற்று நடந்தது. சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்டப் பொதுத் தலைவர் முனைவர் சந்தானசாமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இவர்கள் முன்னிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் 5.53 விநாடியில் 195 உலக நாடுகளின் பெயர், தலைநகர், நாணயத்தின் பெயர் ஆகியவற்றை கூறி சாதனை படைத்தார். தொடர்ந்து இந்த சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான சான்றிதழ், பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!