Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் மெக்கானிக்கை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் கைது…

தஞ்சை அருகே மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் கண்ணன் (36). ஆட்டோ மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவரிடம் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சந்திரகாசன் மகன் லோகநாதன் (52), சந்தோஷ் என்கிற கந்தசூரப்பன் (23) ஆகிய இருவரும் தங்களின் ஆட்டோவை பழுது நீக்கம் செய்துள்ளனர்.

ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் டாஸ்மாக் ஷாப் அருகில் கண்ணன் நின்றிருந்தார். அப்போது அங்கு லோகநாதன், சந்தோஷ் இருவரும் வந்துள்ளனர்.

அவர்களை பார்த்த கண்ணன் கணக்கு வர வேண்டிய பணம் குறித்து கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன், சந்தோஷ் இருவரும் பீர் பாட்டிலால் கண்ணனை தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தெற்கு போலீசில் கண்ணன் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன், சந்தோஷ் இருவரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!