Skip to content
Home » தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு… கலெக்டர் தகவல்…

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் திறக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது… தஞ்சாவூா் மாவட்டத்தில் 2023 – 2024 காரீப் சந்தை பருவத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையையொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2023 – 2024 ஆம் காரீப் சந்தை பருவத்துக்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல்

விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 183 என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி ஊக்கத்தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 107, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 82 அறிவித்துள்ளது. இதன் மூலம், மொத்தம் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 310, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 265 கொள்முதல் தொகையாக (ஊக்கத்தொகை உட்பட) வழங்கப்படும். விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!