Skip to content
Home » பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

பாலில் கலப்படம்…. பால்வியாபாரியை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் எருமை பாலை பசுபால் போல் காட்டுவதற்காக கேசரி பவுடரை கலந்த பால் வியாபாரியை பொதுமக்கள் பிடித்து, உணவுப்பதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த 40 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில், பால் வியாபாரியான, வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் பாலில் பவுடர் ஒன்றை கலந்துள்ளார்.

இதை பார்த்த கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா சிராஜ் என்பவர், போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ராவுக்கு போலீசார் தகவல் அளித்தனர். அவரின் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்புதுறை அலுவலர் வேல்முருகன் சுமார் 40 லிட்டர் பாலை பறிமுதல் செய்தார்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா கூறுகையில், எருமை மாட்டு பால் வெள்ளை நிறத்தில் இருக்கும். பசு மாட்டு பால் சற்று இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்காக எருமைபாலை வாங்கி வந்த தங்கவேல், கேசரி பவுடரை சிறிது கலந்து இளம்மஞ்சள் கொண்டு வர முயன்றுள்ளார். பால் மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எப்படியெல்லாம் யோசித்து கலப்படம் பண்றாங்க பாருங்க என்று மக்கள் நொந்து கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!