Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ., துரை. சந்திரசேகர், எம்.பி.,, பழனிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் 19ம் தேதி பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!