Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசத்தில் சமத்துவ பொங்கல் விழா…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்த்து. பள்ளித் தாளாளர் காஜா முகையதீன் வரவேற்றார். இதில் பங்கேற்று பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பேசும் போது பொங்கல் தமிழரின் திருநாள். உழவர்களுக்கும், உதவுகின்ற கால்நடைகளுக்கும் நன்றி சொல்கின்ற திருநாள். மதங்களால் வேறுப் பட்டாலும், தமிழ் நம்மை ஒருங்கிணைக்கிறது என்றார். இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, துணைத் தலைவர் பூபதி ராஜா, லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் சாப்ஜான், பள்ளி நிர்வாக அதிகாரி சித்தார்த்தன், பள்ளி தலைமையாசிரியர் செல்வி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!