உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள பெத்தணன் கலையரங்கத்தில் சென்னை மாணவிகளின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு பெருவுடையாருக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினர். பல்வேறு பாடல்களுக்கு அபிநயம் பிடித்து பரதம் ஆடிய மாணவிகளின் கலை நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
தஞ்சையில் சென்னை மாணவர்களின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி
