Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி…

தஞ்சை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை மற்றும் இந்திய மருத்துவக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின. இதில் பொது கூட்டம் மற்றும் கூட்டம் நிறைந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போது திடீரென ஒருவர் மயங்கி விழுந்தால் அவரை எப்படி முதலுதவி செய்து காப்பாற்றுவது. ஆம்புலன்ஸ் வரும் வரை அவரது உயிரை மூளை மற்றும் இருதய செயல்பாட்டை எப்படி செயல் இழக்காமல் வைத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் என 250 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் காவலர்களுக்கு மனித வடிவிலான ஒரு பொம்மை கீழே மயங்கி விழுவது படி செய்து அந்த பொம்மைக்கு இருதய துடிப்பை எப்படி சீராக்குவது, மூளை செயல் திறனை எப்படி பாதுகாப்பது என்பது பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆசிஷ்ராவத் தலைமை வகித்தார். தஞ்சை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை தலைவர் சாந்தி பால்ராஜ், பேராசிரியர் லியோ பயிற்சி குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

இதில் இந்திய மருத்துவ கழக தஞ்சை கிளை தலைவர் லியோ ஜோசப், செயலாளர் கார்த்திகேயன், நிதி செயலாளர் பாலமுருகன், டாக்டர்கள் சிங்காரவேல், மைக்கேல், பாரதி, ஏடிஎஸ்பி முத்தமிழ்செல்வன், டிஎஸ்பி ராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். இது போன்ற பயிற்சி அளிப்பதன் மூலம் பலரது உயிரை காப்பாற்ற முடியும் என்று விளக்கி கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!