Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் இருந்து சரக்கு ரயிலில் 1000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு…

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து சேமித்து வைக்கப்படும்.

இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அந்த அரிசி பொது வினியோகத் திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அந்த வகையில் நேற்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.

பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன. தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் கோவை, திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!