Skip to content
Home » தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

தஞ்சையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் மோசடி செய்தவரின் நண்பர் கைது…

தஞ்சாவூர், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாக கூறி நூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார். சில மாதங்கள் பங்கு தொகை வழங்கினார். பின்னர் பங்கு தொகையை வழங்காமல் மோசடி செய்து கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்தார். கடந்த 2021 ஆண்டு செப்.19ம் தேதி கமாலுதீன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான், ஹாரீஸ் ஆகியோரிடம் பணம் கட்டியவர்கள் தங்களின் பணத்தை கேட்டனர். ஆனால், அவர்கள் தர மறுத்து விட்டனர். இது குறித்து ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன. வழக்கை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை டிரான்ஸ்போர்ட் நிறுவன ஊழியர்கள், குடும்பத்தினர் என ஏற்கனவே 13 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 16 பஸ்கள், 8 மினி பஸ்கள், 6 டூ வீலர், 16 கார், ஒரு ஜே.சி.பி., 3 டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், காமலுதீன் நண்பரும், தொழில் பங்குதாரருமான ஹாரீஸ் பிளக்ஸ் உரிமையாளரான, தஞ்சாவூரை சேர்ந்த அங்குராஜ்,41, என்பவர் ராஹத் நிறுவனத்தின் முதலீட்டில் இருந்து சொத்துக்களை வாங்கி குவித்தது இது தொடர்பாக பொருாளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அங்குராஜை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!