மதுராந்தகம் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக வேட்பாளரும், சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ.பரந்தாமன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தல் என்பது தமிழ்நாட்டில் திமுகவின் வலிமையை உணர்த்தியிருக்கக்கூடிய தேர்தல். மக்களுக்காக என்றைக்கும் களத்தில் நிற்கக்கூடிய இயக்கம் திமுக என்பதை மக்கள் நன்றாக புரிந்துள்ளார்கள். இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி.. திமுக வேட்பாளர் ஐ.பரந்தாமன்
