Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ந்தேதி நடைபெற்றது. இதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விஜய் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகு முதல் முறையாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு தனி விமான மூலம் சென்னையில் இருந்து கிளம்பினார். மதுரை விமான நிலையத்தில் இருந்து த. வெ. க தலைவர் விஜய் தனி கார் மூலம் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை பைபாஸ் சாலை வழியாக திருச்செந்தூர் வந்தார். இதையெடுத்து திருச்செந்தூர்

கோவில் வளாகத்தில் பேட்டரி கார் மூலம் ஏறியவர் கோவில் வாசல் வந்து இறங்கினார். கோவில் சண்முக விலாச மண்டபத்தில் விஜய்க்கு பக்த சபாவினர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதன்

பின்னர் கோவிலுக்குள் சென்ற விஜய் முருகர், வள்ளி, தெய்வானை, சண்முகர், தட்சிணாமூர்த்தி,

பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கினார்.தொடர்ந்து வெளியே வந்த அவரை பார்த்து கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் தமிழக வெற்றிக்காக தொண்டர்கள் இளைஞர்கள் கையேசைத்தனர்.மீண்டும் கோவில் வாசலில் இருந்து பேட்டரி காரில் கிளம்பிய அவர் தனது காருக்கு கிளம்பிச் சென்றார் அங்கிருந்து காரில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்று தனது தனி விமான மூலம் மீண்டும் சென்னை செல்கிறார்.

error: Content is protected !!