தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழா குறித்து உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். தலைமைச்செயலாளர் சாய்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் DGP சந்தீப் ராய் ரத்தோர், உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நாளை மறுதினம் (மே 7) நேரு மைதானத்தில் பதவியேற்பு விழாவை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
