Skip to content
Home » ”மக்களுடன் முதல்வர் ”… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

”மக்களுடன் முதல்வர் ”… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்…

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனர்.
அந்த மனுக்கள் மீதான விசாரணை பின்னர் சில மனுக்கள் எந்த நடவடிக்கை இல்லாமல் இருந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வந்தது இந்நிலையில் அநேகர் தமிழக முதல்வரின் புகார் எண்ணிற்கு புகார் அனுப்ப தொடங்கினர் மேலும் முதல்வரின் கவனத்திற்கு பல்வேறு புகார் கொண்டு செல்லப்பட்டது எல்லாவற்றையும் கருத்துக் கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை மக்களுடன் முதல்வர் என்ற ஒரு புதிய திட்டத்தை கோயமுத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி மக்களுடன் முதல்வருக்கான முகாம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இன்று திருச்சி ஸ்ரீரங்கம் தனியார்

மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு  முதல்வர் திட்டத்தை  துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த முகாமில் பொதுமக்கள் மனுக்கள் எழுதிக் கொடுப்பதற்கு அதற்கான ஆட்கள்  நியமிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எழுதப்பட்ட அனைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க காணொளி மூலம் பதிவேற்று செய்யப்பட்டு வருகிறது. இன்று துவங்கிய அந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக ஊராட்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்கள் உள்ளிட்ட துறைகளுக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!