Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றங்கள் நடந்தாலே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது ஆகாது- முதல்வர் விஜய்

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் மாநிலத்திற்கான தொழில் முதலீடுகள் வரும். சட்டத்தை மதித்தால் காவல்துறை உற்ற நண்பனாக இருக்கும். ஆனால் சட்டத்தை மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாக காவல்துறை இருக்கும். காவல்துறை என்பது மக்களின் நம்பிக்கைகளுக்கு அடித்தளமாக விளங்கும் அமைப்பாகும்.

காவல்துறையின் சட்ட நடவடிக்கையில் தேவையற்ற தலையீடு இருக்க கூடாது. ஒவ்வொரு குற்றத்தின் பின்னணியில் ஒரு குடும்பப்பிரச்சனை இருக்கலாம், முன்விரோதமாக இருக்கலாம், பழிவாங்கும் எண்ணம் இருக்கலாம் என்றும் யாருக்கும் தெரியாத புதிய விளக்கத்தை அளித்துள்ளார் முதல்வர் விஜய். சமூக காரணிகளும் குற்றங்கள் நடப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஒரு குற்றம் நடந்துவிட்டது என்பதற்காக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று கூற முடியாது என்றும் கூறினார்.

போதைப்பொருள் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையின் சட்ட நடவடிக்கையில் தேவையற்ற தலையீடு இருக்க கூடாது. போதைப்பொருளை ஒழிப்பது என்பது 100 நாட்களில் முடியாது. வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். போதை பொருள் தடுப்பு தொடர்பாக தவெக ஆட்சியில் 3,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 1.16 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!