Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி என கூறி மளிகை கடையில் ரூ.52 ஆயிரம் திருடியவர் கைது…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் கார்வழி கிராமத்தைச் சார்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நவீன் குமார் என்பவர், தான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என்று கூறியுள்ளார். மேலும் தங்களது மளிகைக் கடையை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி சோதனை செய்துள்ளார். அதன் பிறகு நீங்கள் மருந்து மாத்திரை எதுவும் விற்கக் கூடாது என சில மாத்திரைகளை குப்பையில் போட்டு வாருங்கள் என்று அனுப்பியுள்ளார்.  பொன்னுசாமி மாத்திரைகளை குப்பையில் போட்டு வருவதற்குள் நவீன்குமார் கடையில் இருந்த ரூ. 52 ஆயிரத்தை திருடி  பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

மேலும் இது போன்ற தவறுகள் எதுவும் செய்யக்கூடாது என்று கடை உரிமையாளர் பொன்னுசாமியை எச்சரிக்கை செய்த நவீன்குமார் தான் வந்த இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று விட்டார். பின்னர் சந்தேகப்பட்டு கடையில் உள்ள பணம் வைத்திருக்கும் பையை  பொன்னுசாமி சோதனை செய்தார் அப்போது தான் வைத்திருந்த ரூ.52 ஆயிரம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தென்னிலை காவல் நிலையத்தில் பொன்னுசாமி புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நவீன் குமாரை கொளந்தா பாளையம் சாலையில் வாகன தணிக்கையின்போது கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த பணத்தையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு கரூர் கிளை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!