கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கோமியத்தை குடிக்கவேண்டும் என உத்தராகண்ட்டின் கங்கோத்ரி கோயில் அறிவித்துள்ளது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை கண்டறியவும், பக்தர்கள் சனாதனத்தை கடைபிடிப்பதை உறுதிசெய்யவும் இந்நடைமுறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாம். இது மாற்று நம்பிக்கை கொண்டவர்களை விலக்கி வைக்கும் முயற்சி என்றும் அனைவரையும் உள்ளடக்கிய மதவழிபாட்டை கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
