தமிழக பொதுப்பணித்துறையால், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் ‘பெரியார் அறிவுலகம்’ என்கிற பெயரில், நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு உள்ளது.
முதல்வர் விஜய் இன்று, திறந்து வைத்து, பார்வையிடுகிறார்.
இந்நிலையில் நூலகம் தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஸ்டாலின் கூறியதாவது:
திராவிட மாடல் அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது. யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; அப்பெருமை என்றும் திமுகவுக்கே உரித்தானது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
