2070-ல் உலகில் அதிக இந்துக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 5-வது இடத்திற்கு முன்னேறும் என ‘பியூ’ ஆய்வறிக்கை கூறுகிறது. குடியேற்றத்தால் அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை 74 லட்சமாக உயரும் நிலையில், முதல் 4 இடங்களில் உள்ள இந்தியா (129 கோடி), நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் மாற்றமில்லை. உலகளவில் இந்துக்களின் எண்ணிக்கை 2070-ல் 138 கோடியை எட்டினாலும், மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அதன் சதவீதம் 15%-லிருந்து 14%-ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
5-வது பெரிய இந்து மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் அமெரிக்கா
