Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக-வால் வாக்கு சதவீதம்.. என்பது அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்… சேகர்பாபு

இந்த தேர்தலில் சென்னை திமுகவின் கோட்டையாக இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடைக்கானலில் உள்ள பூம்பாறை மற்றும் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்த சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.O தான் நிகழப்போகிறது. பொதுமக்களிடம் தெரிகின்ற மகிழ்ச்சியே இதற்கு சாட்சியாக விளங்குகிறது. இந்த தேர்தலை பொருத்தவரையில் சென்னை எப்போதுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை, அதேபோன்று இந்த ஆண்டும் திமுகவின் கோட்டையாக சென்னை இருக்கும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாக்கு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. கடந்த ஆண்டுகளைப் போன்று தான் இந்த ஆண்டும் வாக்கு சதவீதம் இருக்கிறது, பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் தான் தவெகவினர் சொல்லுக்கு ஈடாகிறது. திமுக தலைவர்கள் தேர்தலுக்குபிறகு அதிகம் தென்படுவதற்கு திமுக உற்சகமாக இருக்கிறது என்பதை பொருளாகும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் தன்னுடைய தொடர்ந்து செயல்பாடு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு போன்ற நிகழ்ச்சிகள் காரணமாக தொடர்ந்து திமுக மக்களுக்காக செயல்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் தற்போது திமுகவிற்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

error: Content is protected !!