Skip to content

சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரம் வினோதினி (24) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வினோதினி 11ம் வகுப்பு மாணவனை ஆசை வார்த்தை கூறி காதலித்து கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவனை காணாத பெற்றோர் இது தொடர்பாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுவன் காணாமல் போன புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் காணாமல் போன பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுவனை அருகில் வசிக்கும் பெண் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பதுங்கி இருந்த ஊருக்கு சென்று சிறுவனை மீட்டு இளம்பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வினோதினியை போக்சோவின் கீழ் கைது செய்து திருவள்ளூர் மகிலா கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!