விருதுநகர்: இன்ஸ்டா .,போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களை, இளைஞர்களை மதிமயக்கி தவெக வாக்குகளை பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது.. தவெகே ஆட்சி ஒரு மாயையினால் உருவாக்கப்பட்டது என்றும், அதை எப்படி சுமூகமாக நடத்துவது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக-வின் தோல்வி நிச்சயம் நமக்கு ஒரு படிப்பினை தான் என்றும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்றும் தங்கம் தென்னரசு பேசினார். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தவெக-வினர் மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள்.
அவர்கள் உலகம் வேறு, நம் உலகம் வேறு டிஜிட்டல் உலகத்தில் பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் உண்மையாகும் என நினைக்கின்றனர் என்று விமர்சித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் அரசியல் புரிதல் எதார்த்தத்திற்குப் புறம்பாக, ஒரு கற்பனையான உலகத்தில் இருப்பது போல் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். அடிக்க அடிக்க எழும்பும் பந்தை போல தான் திமுக எழும்பும் என்று இவ்வாறு தெரிவித்தார்.
