உலகின் பெருநகரங்களின் அடையாளமாக மாறியுள்ள மெட்ரோ ரயில் புரட்சிக்கு விதை போட்டது 1863-ம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய ரயில் பாதை. ஜனவரி 10, 1863 அன்று ‘மெட்ரோபாலிட்டன் ரயில்வே’ என்ற பெயரில் பாடிங்டன் முதல் பேரிங்டன் வரை சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு உலகின் முதல் நிலத்தடி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. ‘கட் அண்ட் கவர்’ முறையில் அமைக்கப்பட்ட இந்தப் பாதை, தற்போது 11 வழித்தடங்கள், 272 நிலையங்கள் மற்றும் சுமார் 402 கி.மீ. நீளத்துடன் தினமும் 50 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
