Skip to content
Home » திருப்பதியில் 5வது கற்பக விருட்ச வாகன புறப்பாடு…

திருப்பதியில் 5வது கற்பக விருட்ச வாகன புறப்பாடு…

ரதசப்தமி தினமான இன்று திருப்பதி மலையில் ஐந்தாவது வாகன புறப்பாடாக ஏழுமலையானின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு நடைபெற்றது. ரதசப்தமியை முன்னிட்டு இன்று காலை முதல் வாகன புறப்பாடாக சூரிய பிரபை வாகன புறப்பாடும், இரண்டாவது வாகன புறப்பாடாக சின்ன சேஷ வாகன புறப்பாடும் 3வது வாகன புறப்பாடாக

கருட வாகன புறப்பாடும் நடைபெற்ற நிலையில் 4வது வாகன புறப்பாடாக அனுமந்த வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து 5வது வாகன புறப்பாடாக கற்பக விருட்ச வாகன புறப்பாடு நடைபெற்றது. தங்க கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த உற்சவர் மலையப்ப சாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!