திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்துத் திருடும் சம்பவங்கள் அண்மைக்காலமாகப் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகையக் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கக் காவல் துறை தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில் மேல்நல்லாத்தூர் பகுதியில் இந்த துணிச்சலானத் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குறளரசன். இவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்கப் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்துக் குறளரசன் அளித்துப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சோதனையில், இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது சஞ்சய் மற்றும் ஆகாஷ் ஆகிய இரு இளைஞர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
