Skip to content
Home » ஒரு மாதத்தில் பாஜகவில் சேரவில்லை என்றால் கைது….. ஆம்ஆத்மி மந்திரிக்கு மிரட்டல்

ஒரு மாதத்தில் பாஜகவில் சேரவில்லை என்றால் கைது….. ஆம்ஆத்மி மந்திரிக்கு மிரட்டல்

மதுபான கொள்கை ஊழல் வழக்கில்  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், ஆம் ஆத்மியின் மந்திரி அதிஷி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, எனக்கு நெருங்கிய உதவியாளர் ஒருவர் வழியே பா.ஜ.க.வினர் என்னை அணுகினார்கள். என்னுடைய அரசியல் வாழ்க்கை காப்பாற்றப்பட வேண்டுமென்றால், நான் பா.ஜ.க.வில் இணைய வேண்டும் என என்னிடம் கூறினார்கள். ஒரு மாதத்திற்குள் கட்சியில் சேரவில்லை என்றால் அமலாக்கத்துறையினரால் நான் கைது செய்யப்படுவேன் என்றும் என்னிடம் கூறினார்கள் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு முன், இன்னும் 2 மாதங்களில் ஆம் ஆத்மியின் சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சத்தா ஆகிய 4 தலைவர்களை அவர்கள் கைது செய்வார்கள் என அதிஷி கூறியுள்ளார்.  இதற்கு ஏற்றாற்போல், சவுரப் பரத்வாஜ் மற்றும் என்னுடைய பெயரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் கூறினார்கள். டில்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்- மந்திரியான மணீஷ் சிசோடியா மற்றும் மந்திரியாக இருந்த சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டபோதும், ஆம் ஆத்மி கட்சி ஒற்றுமையாகவும் மற்றும் வலிமையாகவும் உள்ளது என பா.ஜ.க. உணர்ந்திருக்கிறது. அதனால், கட்சியில் அடுத்த நிலையிலுள்ள தலைவர்களை சிறையில் அடைக்க அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என அதிஷி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!