கோவை மாவட்டம் பொள்ள பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்றல் சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் தங்கம் தலைமையில் போலீசார் தீவிர ரவுண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் வடக்கிபாளையம் தேவம்பாடி வலசு செல்லாண்டிபாளையம் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு ஆய்வாளர் பழனியம்மாளுக்கு தகவல் வந்தது இதை அடுத்து மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் தங்கம் உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது அருண் பிரசாத் என்பவர் தோட்டத்தில் பால் கேனில் சாராய ஊரல் போடப்பட்டது தெரிய வந்தது இந்த செயலில் ஈடுபட்ட அருண் பிரசாத் (39) ஆண்டியப்பன் (25) முத்துக்குமார் (44) விசாரணையில் தெரியவந்தது இவர்கள் செல்போன் செயலில் யூடுயுப் மூலம் சாராயம் காய்ச்சுவது முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்தது மதுவிலக்கு போலீசார் பால்கேன் பறிமுதல் செய்து நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்தி பொள்ளாச்சி கிளை அடைத்தனர் யூ டியூப் மூலம் சாராயம் முயற்சித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது
பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

