Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் அரசு அதிகாரி உட்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

கரூரில் அரசு நிதியை முறையீடு செய்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி உட்பட மூவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை.

கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியில் முறைகேடு நடைபெற்றதாக, அரசு ஆவணங்களில் திருத்தம் செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2005-2006ஆம் ஆண்டுகளில், அரசு ஆவணங்களில் திருத்தம் செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, அப்போதைய மாவட்ட அலுவலர் ஜவகர், தச்சு மற்றும் கொள்ளு தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர்கள் கணேசன் மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வந்த நிலையில் முன்னாள் மாவட்ட அலுவலர் ஜவகர் மற்றும் கூட்டுறவு சங்க உப தலைவர் கணேசன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு உப தலைவர் தங்கவேலுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!