Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்…

தஞ்சாவூரில் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கணேசன் தலைமை வகித்தார். அனைவரையும் மாவட்டப் பொருளாளர் வி.தமிழ்வாணன் வரவேற்றார். கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டமைப்பின் எதிர்கால திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பி.ரவி. எஸ்.முருகேசன், ஜி.பூபதி, எஸ்.கோப்பெருந்தேவி, டி.எஸ்.தசரதராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் துணை ராணுவப் படை வீரர்களுக்கு தமிழக அரசு நல வாரியம் அமைத்து, அதன் மூலம் மாவட்ட அளவில் கேன்டீன் வசதிகள், வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு எந்த அளவுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகிறதோ, அதே போல் துணை ராணுவப் படையின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு ராணுப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கும் உயர்கல்வி இடஒதுக்கீடான 2 சதவீதத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துக்கூறும் வகையில் வலுவான மக்கள் பிரதிநிதி தேவை என்பதால், வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிடுவது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!