Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீன தூதரகத்திற்குள் நுழைய முயன்ற திபெத் இளைஞர்கள் – டில்லியில் பதற்றம்

டில்லியில் உள்ள சீன துாதரகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற திபெத் இளைஞர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். திபெத், கிழக்கு துர்கிஸ்தான், தெற்கு மங்கோலியா மற்றும் மஞ்சூரியா மீது சீனா “தொடர்ந்து தனது இறையாண்மையையும் அரசியல் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டுவதை” திபெத்திய இளைஞர் காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்தது. சீனா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று தனது நிறுவன நாளைக் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் டில்லியில் உள்ள சீன துாதரகத்தின் முன்பு திபெத்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். திபெத் மீதான சீனாவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் திபெத்த்தியர்களின் கலாச்சாரம்ம் மற்றும் மத அடையாளங்களை அளிக்கும் முயற்சிகளை சீனா நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு சீன தூதரகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே சீன துாதரகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற திபெத் இளைஞர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!