Skip to content
Home » டிக்கெட்டை பயணி முகத்தில் விட்டு எறிந்த அரசு பஸ் கண்டக்டர்…

டிக்கெட்டை பயணி முகத்தில் விட்டு எறிந்த அரசு பஸ் கண்டக்டர்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தேனி மாவட்டம் போடி கிளையைச் சேர்ந்த TN 57 N 2191 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இன்று காலை போடியில் இருந்து பழனி வழியாக கோவை உக்கடம் பேருந்து நிலையம் சென்று கொண்டு இருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பெண் பயணி ஒருவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்டு உள்ளார். அப்பொழுது அந்தப் பெண் பயணியிடம் டிக்கெட்டுக்கு

தேவையான சில்லறை பணம் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண் பயணி தன்னிடம் சில்லறை இல்லை என கூறியதற்கு. ஆத்திரமடைந்த அந்த பேருந்து நடத்துனர். அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தரக் குறைவாகவும், மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் முகத்தில் டிக்கெட்டை விட்டெறிந்தார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போன் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது:-

தனியார் பேருந்துகள் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் பயணிகளை கவரும் வகையில் அனைவர் இடத்திலும் மரியாதை உடன் பேசி பயன்களை மகிழ்ச்சியுடன் கொண்டு சென்று சேர்க்கின்றனர். ஆனால் அரசு பேருந்துகளிலோ சமீபத்தில் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம் என்பதாலும், இது போன்ற பேருந்து ஓட்டுனர், நடத்துனர் அரசு வேலை என்பதாலும் தாங்கள் சொல்வது தான் சட்டம் என்றும் பயணிகளை மிரட்டுவதுடன், அவமானம் படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இவர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். மேலும் அரசுக்கு வருவாய் பெருக்க முடியும் என்றும் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!