Skip to content
Home » திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,   தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில்  3 நாள்  சுற்றுப் பயணம்  தொடங்கினார். இதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 10 மணி அளவில் திருச்சி வருகிறார்.  விமான நிலையத்தில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள்,  அதிகாரிகள், எம்பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.

வரவேற்பு முடிந்ததும் காரில்  கும்பகோணம் செல்கிறார். மாலையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிக்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று  புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசுகிறார். அந்த விழா முடிந்ததும் இரவில் வேளாங்கண்ணி சென்று தங்குகிறார்.

நாளை (25-ந்தேதி) காலை  8 மணிக்கு திருக்குவளைக்கு செல்கிறார். அங்கு  முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும்  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அன்று மாலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  நடத்துகிறார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், விவசாய சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். இரவில் வேளாங்கண்ணி சென்று தங்குகிறார்.

26-ந்தேதி காலையில் கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் நாகையில் இருந்து திருவாரூருக்கு சென்று இரவில் அங்கு தங்குகிறார். 27-ந்தேதி திருத்துறைப்பூண்டி சென்று அங்கு நடைபெறும்  செல்வராஜ் எம்.பி. இல்ல  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை  திரும்புகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!