திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பக்தர்கள் வைகுண்ட துவார தரிசனம் செய்வதற்கு, ‘இ-டிப்’ (எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல்) முறையில் இலவச தரிசன டோக்கன்களை பதிவு செய்யலாம். இந்த பதிவு டிசம்பர் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறும். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி மாலை 3 மணிக்கு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி சொர்க்கவாசல் தரிசன டிக்கெட்டுகள்.. முன்பதிவு அறிவிப்பு
