Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர்-104.14 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கிய உதயநிதி

தமிழக முதலமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இதில் முடிவுற்ற திட்ட பணிகளான தாட்கோ வகுப்பறை மற்றும் அறிவுசார் மைய கட்டிடங்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் உழைப்பாளர் நலக்கூடம், மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் என சுமார் 3.65 கோடி மதிப்பில் கட்டிடங்களை திறக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, திட்ட அலுவலர் மகளிர் திட்டம், ஊரக

வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள், தொழில் வணிக துறை, சமூக பாதுகாப்பு திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 16 துறையின் சார்பில் 4949 பயனாளிகளுக்கு சுமார் 104.14 கோடி மதிப்பில் நலத்திட்ட ‌ வழங்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து விட்டு ‌ஜோலார்பேட்டை தொகுதிக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலகம் திறப்பு விழா மற்றும் வாணியம்பாடி தொகுதிக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூலக திறப்பு விழா, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

error: Content is protected !!