Skip to content

திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம்நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும், தீபாரதனையும்  நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதியுலா  வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவிலின் வெளிப்புறத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர். பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாத தரிசன  நிகழ்வு , பங்குனி உத்திரம் மற்றும்  மாரிகழி திருவாதிரை ஆகிய 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!