Skip to content
Home » திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

திருவெறும்பூர் மகளிா் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர்   அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயலட்சுமி. இவர்  நாகைக்கு மாற்றப்பட்டார்.  ஆனால் அவர் நாகைக்கு செல்லாமல் அந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டார்.  கடந்த மாதம்  அவருக்கு அரியலூர் மாறுதல் கொடுக்கப்பட்டது. அங்கும் அவர் செல்ல மறுத்து, பணியை தொடர்ந்தார்.

இதுபற்றிய செய்தி இ -தமிழில்  கடந்த 14ம் தேதி வெளியானது.  இந்த செய்தி  வெளியான மறுநாளே  விஜயலட்சுமி  அரியலூருக்கு  அதிரடியாக மாற்றப்பட்டார்.  அவருக்குப்பதில் புதுக்கோட்டையில் இருந்து  வந்துள்ள மங்கையர்க்கரசி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!