Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 9ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலை அன்பில் தர்மலிங்கம் நகர் அருகே
புகையிலை விற்ற கொல்லங்குளம் பகுதியை சேர்ந்த வேலுமணி ( 53 ) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்
இதேபோன்று பெரிய மிளகு பாறை அருகே புகையிலை விற்ற மேட்டுப்பட்டி ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா ( 27 ) போலீசார் கைது செய்தனர் . மேலும் அரசு மருத்துவமனை அருகே புகையிலை விற்ற அரியாவூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாபு 38) என்பவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த கிராம் 380 புகையிலை பறிமுதல் செய்தனர் பின்னர் 3 பேரையும் ஜாமினில் விடுவித்தனர்

முதியவரின் பையில் வைத்திருந்த 4 பவுன் நகை திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் அறிஞர் அண்ணா நகரைசேர்ந்தவர் பெரியசாமி வயது 65. சம்பவத்தன்று இவர் ஸ்ரீனிவாசா நகர் 7வது கிராசில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்வதற்காக டவுன் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தார். பின்னர் அவர் சத்திரம் பஸ் நிலையத்தில் இறங்கிய பின் தான் வைத்திருந்த பையை பார்த்துள்ளார். இதையடுத்து பையில் வைத்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தொழிலாளி தற்கொலை

திருச்சி துறையூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40).
இவருக்கும் சந்திரா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சந்திரா, கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் குடும்பம் நடத்த வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பன்னீர்செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் முத்து நகரில் உள்ள வாடகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் சம்பூரணம் துறையூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!