Skip to content
Home » இன்றைய ராசிபலன்… (21.01.2024)

இன்றைய ராசிபலன்… (21.01.2024)

இன்றைய ராசிபலன்… (21.01.2024)

மேஷம்…

இன்றைய நாள் சீரான முடிவுகளுக்கு சாதகமாக அமையாது. உங்கள் செயல்கள் சுமுகமாக நடப்பதற்கு அதிக அளவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் சகபணியாளர்களுடன் பழகும் போது கவனம் தேவை.

ரிஷபம்..

உங்கள் துணையுடன் அன்பான உறவினை பகிர்ந்து கொள்வது கடினமாக இருக்கும். அதனால் அமைதியுடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது.உங்கள் பணிகளைக் கையாளும் போது கவனம் தேவை. உங்கள் மூத்தவர்களின் ஆலோசனையைப்பெற வேண்டும்.

மிதுனம்..

இன்று அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் கவனமாக இருக்க வேண்டும். சூடான வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்பிருப்பதனால் முக்கியமாக அண்டை அயலாருடன் அல்லது மூன்றாவது நபருடன் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

கடகம்…

இன்றைய நாள் நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான உயர்ந்த லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். புதிய தொடர்புகளுக்கும் புதிய நட்பிற்கும் இன்று வாய்ப்புள்ளது.பணியில் சிறந்த வளர்ச்சி காணப்படும். சகபணியாளர்கள் உங்கள் செயல்திறனைக் கண்டு பொறாமைப்படுவார்கள்.

சிம்மம்…

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். சிறிய முயற்சிகள் கூட இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய நண்பர்களின் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன. இன்று கிடைக்கும் இந்த நல்ல வாய்பபுகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கன்னி.. .

இன்று அசௌகரியங்கள் காணப்படும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். உங்கள் அருகில் உள்ளவர்கள் மற்றும்அன்பானவர்களிடம் பேசுவதில் தயக்கம் காணப்படலாம். இன்று அதிக செலவினங்கள் காணப்படும். வீட்டு மறுசீரமைப்பிற்கும் வீட்டை செப்பனிடுவதற்கும் பணத்தை செலவு செய்வீர்கள்.

துலாம்…

உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். வெற்றியில் கவனத்தை செலுத்த நம்பிக்கை ஒன்றே அவசியம்.ஒவ்வாமை காரணமாக தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.

விருச்சிகம்…

இன்று அதிக அளவில் பலன்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் காணப்படும். ஆன்மிக செயல்களில் ஈடுபடுவது ஆறுதலை அளிக்கும். மேலும் சவால்களை எதிர்கொண்டு வெல்வதற்கு உதவும்.பணியில் இன்று வெற்றிகரமான பலன்கள்கிடைக்கும். உங்கள் அணுகுமுறையில் யதார்த்தமும் கவனமும் காணப்படும்.

தனுசு…

உங்கள் முயற்சிகளின் வளர்ச்சி சாதகமாக இருக்கும். உங்கள் சாதனைகள் மூலம் உங்கள் திறனை உணர முடியும். உங்கள் தொடர்பாடல் திறமை நன்கு வெளிப்படும். உங்கள் திறமை மற்றும் உறுதி காரணமாக உங்கள் பணிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் உங்கள் பணிகளை நேர்மையாகச் செய்வீர்கள்.

மகரம்…

இன்றைய நாள் சாதகமான நாளாக அமையாது. நீங்கள் சாந்தமாகவும் மகிழ்ச்சியுடனும் இருப்பது நல்லது. இன்றைய செயல்களை சிறந்த முறையில் நிர்வகிக்க நீங்கள் வளைந்து கொடுத்து போக வேண்டியது அவசியம். பணிகளை ஆற்றும் பொழுது நீங்கள் தவறுகள் செய்ய நேரலாம். இன்று பணியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

கும்பம்…

இன்றைய தினம் உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பயத்தின் காரணமாக சோர்ந்து காணப்படுவீர்கள். மகிழ்ச்சி குறைந்து காணப்படும். இன்று பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத வகையில் சம்பாதிப்பீர்கள். எனினும் அதில் திருப்தி அடையமாட்டீர்கள். நாளின் இறுதியில் தேவையற்ற செலவுகளை சந்திப்பீர்கள்.

மீனம்…

இன்றைய நாள் பொதுவாக சிறப்பாக உள்ளது. நீங்கள் உயர்ந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.நீங்கள் உங்கள் ஆக்கத்திறனை மேம்படுத்தி மிகவும் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். கடினமான பணிகளைக் கூட எளிதாக முடிக்கும் திறன் உங்களிடம் காணப்படும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!