வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவ.19) அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்குப் பார்வைத்திறன் குறைந்து, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
மூடுபனி விபத்துகளைத் தடுக்க சுங்கச்சாவடி ஊழியர்கள் முயற்சி!
